நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் 'சீதா பயணம் 'படத்தின் புதிய பாடல் வெளியீடு

22 Jan, 2026 | 03:18 PM
image

தமிழ் திரையுலகின் நட்சத்திர வாரிசான ஐஸ்வர்யா அர்ஜுன் கதையின் நாயகியாக நடித்திருக்கும்' சீதா பயணம்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'அசல் சினிமா' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீதா பயணம்' எனும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், அர்ஜுன், துருவா சர்ஜா , பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, சரண் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் என்ற திரைப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார். இளம்பெண் ஒருவரின் நோக்கமற்ற பயணத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆஹா ஓஹோ என்பான்டி.. அழகி நீதானே என்பான்டி..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் சுரேஷ் ஜித்தன் எழுத, பின்னணி பாடகி அனுராதா பட் பாடி இருக்கிறார். திருமண வைபவம் ஒன்றில் பங்கு பெற்றும் இளம்பெண் - மணப்பெண்ணின் உணர்வுகளை பற்றிய கொண்டாட்ட பாடலாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் - அனைத்து சுப நிகழ்வுகளிலும் இனி இடம்பெறும் வகையில் இனிமையாக அமைந்திருப்பதால் ரசிகர்களிடமும் வரவேற்பினை பெற்று இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35