கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது!

Published By: Digital Desk 1

22 Jan, 2026 | 02:42 PM
image

அரச வைத்திய அதிகாரிகள் சங்க்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று வியாழக்கிழமை (22) முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த  வேலைநிறுத்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

நிதி மற்றும் நிர்வாக முறைகேடு சம்பவங்கள் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரை அவரது பதவியில் இருந்து நீக்க கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு பணிப்பாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரி அவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, குற்றச்சாட்டுகளுக்குள்ளான, வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளரை உடனடியாக நீக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியதை அடுத்து, அவர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போது வழக்கம் போல் நோயாளர் பராமரிப்பு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22