இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி தற்போது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இன்றைய மூன்றாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணியின் தலைவர் கப்புகெதர வெற்றிபெற்றார்.

இலங்கை சுற்றுலாவில் தொடர்ச்சியாக அத்தனை நாணய சுழற்சியையும் கோலி வெற்றி கொண்டார் ,புதிய தலைவர் கப்புகெதர தலைமையில் இலங்கை சுற்றுலாவில் கோலிக்கு முதல் தோல்வி இன்று நாணய சுழற்சியில் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்திமால் தலைமையிலான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும், உபுல் தரங்க தலைமையிலான முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் நாணய சுழற்சியில் கோலியே வெற்றி பெற்றார்.