7 முஸ்லிம் தலைவர்களை “தேசிய வீரர்கள்” என வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்த கோரிக்கை - எம்.எல்.ஏ.எம்.ஹிஸஙபுல்லாஹ்

Published By: Vishnu

22 Jan, 2026 | 04:26 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதற்காக, தேசத்துரோகிகளாகப் பெயரிடப்பட்டுள்ள 7 முஸ்லிம் தலைவர்களை "தேசிய வீரர்கள்" என வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என எம்.எல்.ஏ.எம்.ஹிஸஙபுல்லாஹ் எம்.பி சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் உரையா்றறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பிரித்தானிய அரசுக்கெதிராக போராடிய பல நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தேசத்துரோகிகளாக அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களால் பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

1796 முதல் 1948 வரையிலான காலப்பகுதியில், பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயற்பட்ட காரணத்திற்காக, இலங்கையர்கள் தேசத்துரோகிகளாகப் பட்டியலிடப்பட்டு அவர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டது.

குறிப்பாக, அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களால் 1804 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 123 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 1818 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் பல சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசத்துரோகிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அவர்களது உரிமைகள், உடமைகள் பறிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2016 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1998/25 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம், தேசத்துரோகிகளாகப் பெயரிடப்பட்டிருந்த 19 சுதந்திரப் போராட்ட வீரர்களும் மற்றும் 2017 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், தேசத்துரோகிகளாகப் பெயரிடப்பட்டிருந்த 82 சுதந்திரப் போராட்ட வீரர்களும் அந்தப் பெயரிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் "தேசிய வீரர்கள்" (தேசப்பற்றாளர்கள்) என உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சுதந்திர சதுக்கத்திலே இடம்பெற்ற நிகழ்வில் இவர்களது பரம்பரையினர் அழைக்கப்பட்டு "தேசிய வீரகளின் பரம்பரையினர்” என கௌரவிக்கப்பட்டனர்.

இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கம், பிரித்தானிய ஆட்சியாளர்களால் 1804 ஜூலை 07 மற்றும் 1818 ஜனவரி 10 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களினால் அநீதிக்குள்ளான தேசிய வீரர்களை மீண்டும் கௌரவப்படுத்துவதாகும். இதன் மூலம், அவர்கள் இந்நாட்டுக்காகச் செய்த தியாகங்கள் அங்கீகரிக்கப்பட்டு, வரலாற்று ரீதியான அநீதி சரி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மேற்குறிப்பிட்ட 1804 ஜூலை 07 மற்றும் 1818 ஜனவரி 10 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் மட்டக்களப்பு (தற்போது அம்பாரை), திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 1100 முஸ்லிம் தலைவர்கள் தேசத்துரோகிகளாகப் பெயரிடப்பட்டிருந்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த (தற்போது அம்பாரை மாவட்டம்) தேசப்பற்றாளர்களான மீரா உசன் அவ்வக்கர் (பெர. காரியப்பர்) -ராய்முனை,உசன் லெப்பை உதுமா லெப்பை (பெர. காரியப்பர்) - ராய்முனை,அவ்வக்கர் ஈசா (முகாந்திரம்) சம்மாந்துரை, அனீஸ் லெப்பை (ஒல்லாந்து காலத்து முன்னாள் மலாய் உத்தியோகத்தர்) மருதமுனை.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேசப்பற்றாளர்களான, சேகு தீதி - தோப்பூர், சலம்பதி உடயார் (குச்சவெலி 2ம் கிராமத் தலைவர்) - குச்சவெலி, பீர் முகம்மத்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதற்காக, தேசத்துரோகிகளாகப் பெயரிடப்பட்ட மேற்கண்ட 7 பேரும், அந்தப் பெயரிலிருந்து இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. எனவே இந்நாட்டுக்காகத் தியாகம் செய்த அந்த 7 முஸ்லிம் தலைவர்களை "தேசிய வீரர்கள்"

(தேசப்பற்றாளர்கள்) என உங்களது அமைச்சினூடாக வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதன் மூலம் அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட ஆவண செய்யுமாறு இவ் உயரிய சபையிலே தங்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21