நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ். அரசாங்க அதிபரிடையே சந்திப்பு!

Published By: Vishnu

22 Jan, 2026 | 04:20 AM
image

நெதர்லாந்து  உயர்ஸ்தானிகர் H. E. Wiebe De Boer,  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபனை புதன்கிழமை (21.01.2026) காலை 10.00 மணிக்கு  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில் மீள்குடியேற்ற நிலைமைகள், இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்கள் மற்றும் மீளக்குடியமரவுள்ள குடும்பங்கள் தொடர்பாகவும், அக் குடும்பங்களின் வாழ்வாதார நிலைப்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம்  கேட்டறிந்து கொண்டார்.

விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் அத் துறைகளின் நவீனமயமாக்கல் தொடர்பாகவும், மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார நிலவரங்கள், தீவக அபிவிருத்தி குறிப்பாக முதலீட்டு வாய்ப்புகள்    போன்ற விடயங்கள் தொடர்பாகவும் டித்வா புயல் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம்  கேட்டறிந்து கொண்டார்.

மேலும், யாழ்ப்பாண கோட்டை தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களிடம் வினாவிய போது, தற்போது யாழ்ப்பாண கோட்டை சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ளதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அதிகம் வருகைதரும் இடமாகவும், தொல்லியல் திணைக்களம் மற்றும் சுற்றுலா அமைச்சுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும்  என்பதுடன் உள்பகுதியில் சுற்றுலாவிகளை கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை உயர்ஸ்தானிகருக்கு அரசாங்க அதிபர் விபரித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி சம்பந்தமாக அக்கறை செலுத்தி பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் தீவுப் பகுதி சுற்றுலா அபிவிருத்தி குறிப்பாக நெடுந்தீவு பிரதேச சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது. இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் நெதர்லாந்து தொடர்பான ஆவணப் புத்தகம் அரசாங்க அதிபரிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இச் சந்திப்பில் நெதர்லாந்து உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான சிரேஷ்ட ஆலோசகர் திரு. நாமல் பெரேரா  அவர்களும், கலாசார ஆலோசகர் திரு. கிறைசனி மெண்டிஸ்ஸும் உடனிருந்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ  நாட்டை விட்டு தப்பிச்...

2026-09-16 17:44:55
news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32