வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் உருவாகி 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மங்காத்தா’. இப்படத்தில் முதல் முறையாக, அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார்.
மேலும் இதில் த்ரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த அஜித்துக்கு, ‘மங்காத்தா’ பெரும் ‘கம்பேக்’ திரைபடமாக அமைந்தது. கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம், அஜித்தை வில்லனாக கொண்டாட வைத்த படம் ‘மங்காத்தா’.
இந்நிலையில், இத்திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் வரும் 23ம் தேதி மீண்டும் வெளியாகிறது.
அந்த வகையில், தமிழகத்தின் அண்டை நாடான இலங்கையில் உள்ள 22 தியேட்டர்களில் ‘மங்காத்தா’ திரையிடப்படுகிறது. அதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட இந்த தியேட்டர்களில், வரும் 23ம் தேதி அஜித்தின் ‘மங்காத்தா’ வெளியிடப்படுகிறது
1- பாமன்கடை: ஈரோஸ்
2- மட்டக்களப்பு: விஜயா
3- கொழும்பு: சினி சிட்டி
4- வத்தளை : ராம்
5- கண்டி: ஜேபி சினிப்ளக்ஸ்
6- காலி முகத்திடல்: PVR
7- யாழ்ப்பாணம்: ரீகல்
8- நுவரெலியா: ரீகல்
9- தெமட்டகொடை: ரீகல்
10- பண்டாரவளை: ரீகல்
11- தெஹிவளை: கான்கார்ட்
12- வெள்ளவத்தை: SAVOY 3D
13- யாழ்ப்பாணம்: ராஜா நான்
14- திருகோணமலை: சரஸ்வதி
15- வவுனியா: வசந்தி
16- மட்டக்களப்பு: சுகந்தி
17- கல்முனை: G.KI
18- மட்டக்களப்பு: PCA
19- திருகோணமலை: நெல்சன்
20- அக்கரைப்பற்று: அர்ச்சனா
21- மாங்காடு: கிபேஷ்
22- கிளிநொச்சி: சேரன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM