இரட்டை குழந்தைகள் பிரசிவித்த தாயொருவர் பத்து நாள் உயிருக்கு போராடி கடையில் தனது கணவனின் இறுதி கிரிகையன்று உயிரிழந்தமையால் அத்தம்பதிகளின் மூன்று குழந்தைகளும் அனாதையாகியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் மீளா சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ஜெவேயின் சுக்யின் மனைவி ஸ்டெபானி கேசர்ஸ் இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது.

மீண்டும் கர்ப்பமடைந்த ஸ்டீபனி வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் வீட்டில் இருந்த ஜெவேயின் மர்ம நபர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று மூன்று நாளில் ஸ்டெபானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததோடு, நோய் தொற்றுக்குள்ளாகியிருந்த ஸ்டெபானி பத்து நாட்கள் உயிருக்கு போராடி உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த அதே நாளில் தான் ஜெவேயின் இறுதி சடங்கு நடத்தப்பட்டு அவரின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தம்பதிகளின் மூன்று குழந்தைகளும் அனாதையாகியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் மீளா துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.