இன்றைய திகதியில் சிறுநீரகத்தில் கல் இருப்பதாகக் கூறி சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. சமீபத்திய ஆய்வின் படி உலகளவில் 13 சதவீத ஆண்களும், 7 சதவீத பெண்களும் சிறுநீரகக் கல் பாதிப்பிலிருந்து உரிய சிகிச்சைகளைப் பெறாமல் தண்ணீரை சரியான முறையில் அருந்துவதாலும், உணவு கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுவதாலும் குணமடைகிறார்கள். அதேபோல் 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை சிறுநீரகத்தில் முதல் கல் உருவானதிலிருந்து அடுத்த 5ஆண்டுகளுக்குள் அதன் பாதிப்பினை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உரிய நேரத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தண்ணீர் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை உறுதியாக பின்பற்றுகிறார்கள். இதன் மூலம் சிறுநீரகக்கல்லின் பாதிப்பு குறைந்து நாட்பட்ட சிறுநீரக சிக்கல் ஏற்படாமல் தடுத்துக் கொள்கிறார்கள்.
எம்மில் பலரும் பொதுவாக சிறுநீரகத்தில் கல் என்றால் அது கால்சியம் கல் என்று தான் கருதுகின்றனர். ஆனால் கால்சியம் கற்கள், யூரிக் அமில கற்கள், ஸ்ட்ரூவைட் கற்கள் எனப்படும் கற்கண்டுகள் மற்றும் சீஸ்டீன் கற்கள் என நான்கு வகையான கற்கள் உள்ளன. இதில் கல்சியல் ஓக்ஸிலெட் கற்கள் இருந்தால் மட்டுமே நாட்பட்ட சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகிறது. ஏனைய கற்கள் அதன் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை கொடுத்து குணமடையச் செய்யலாம்.
தண்ணீர் சீரான இடைவேளையில் அருந்துவதன் மூலமே உடலில் தங்கியிருக்கும் யூரிக் அமிலங்கள் கற்களாகாமல் கரைய வைக்கின்றன. கல்சியம் ஓக்ஸலேட் சத்துகள் அதிகமுள்ள கீரை, சொக்லேட், கொட்டைகள், ஸ்ட்ராபெர்ரி, தேநீர் மற்றும் கோதுமை தவிடு ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் படி தான் சிறுநீரகக் கல்லிற்கான சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் சாப்பிடவேண்டும். மாமிச உணவுகளையும் தவிர்த்துவிடவேண்டும். உடல் எடையையும் பராமரிக்கவேண்டும்.
வைத்தியர். சங்கர்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM