இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை குழாத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் தனஞ்சய டி சில்வா

21 Jan, 2026 | 12:19 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக வியாழக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு சரித் அசலன்க தலைமையிலான 17 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக இன்று வெளியிட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் தோல்வியில் முடிவடைந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்ற ஒருவரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

அதேவேளை, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் தனஞ்சய டி சில்வாவும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெறாமலிருந்த சுழல்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகேவும் குழாத்தில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீரவுக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் மிலன் ரத்நாயக்க இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிராக கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான மிலன் ரத்நாயக்க அதன் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாம்

சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, தனஞ்சய டி சில்வா, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, ஜெவ்றி வெண்டசே, மஹீஷ் தீக்ஷன, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான், ஏஷான் மாலிங்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை வருகை தரும் இந்திய ஏ...

2026-05-16 09:43:45
news-image

சென்னை பந்துவீச்சாளர்களை வாட்டி எடுத்தார் மிச்செல்...

2026-05-16 03:41:15
news-image

இலங்கை - நியூஸிலாந்து மகளிர் ஏ...

2026-05-16 03:37:30
news-image

டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 8 புள்ளிகளை இழந்தது...

2026-05-15 16:30:14
news-image

மும்பைக்கு ஆறுதல் வெற்றி ; பஞ்சாபுக்கு...

2026-05-15 10:26:29
news-image

மத்திய மற்றும் தெற்காசிய அணிக்கு எழுவர்...

2026-05-14 17:28:24
news-image

விராத் கோஹ்லி 9வது ஐபிஎல் சதம்,...

2026-05-14 09:36:21
news-image

SLC கிரிக்கெட் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டன

2026-05-13 18:14:09
news-image

விளையாட்டுத்துறையில் புகழ்பெற்ற நிர்வாகி பிரேமா பின்னவல...

2026-05-13 17:34:45
news-image

LPL தொடரின் உலகளாவிய விரிவாக்கத்திற்காக 20...

2026-05-13 14:38:22
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை படுதோல்வி அடையச் செய்து...

2026-05-13 12:59:02
news-image

பாகிஸ்தானை கடைசி ஆட்ட நேர பகுதியில்...

2026-05-12 21:39:00