காத்தான்குடியில் சிறுவனிடம்  பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த மாமனார் கைது

Published By: Digital Desk 3

21 Jan, 2026 | 11:00 AM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுவனிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்றதாகக் கூறப்படும் அவரது மாமனாரை, தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (20) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுவனின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதுடன், தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் மற்றும் அவரது சகோதரர்கள், தந்தையின் உறவினரான மாமனார் வீட்டிற்குச் சென்று தொலைபேசி மூலம் தந்தையுடன் தொடர்பு கொண்டு வந்துள்ளனர். இதற்காக, தந்தை மாதாந்தம் ரூ.30,000 பணத்தை மாமனார் ஊடாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 24 ஆம் திகதி, மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த போது, குறித்த மாமனார் சிறுவனிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் மாமனார் வீட்டிற்கு சென்ற சந்தர்ப்பத்திலும், அதேபோன்ற செயலில் ஈடுபட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைப் பற்றி சிறுவன் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி 1990 அவசர சேவைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்து, வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து தலைமறைவாக இருந்த சந்தேகநபரை தேடி வந்த பொலிஸார், நேற்று (20) அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயாகலையில் “குடு சலிந்துவின்” நெருங்கிய சகாக்கள்...

2026-04-21 15:26:29
news-image

பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள்...

2026-04-21 15:26:07
news-image

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு...

2026-04-21 15:22:29
news-image

மாகும்புரவில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் புதிய...

2026-04-21 15:16:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-04-21 14:05:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தற்போதைய...

2026-04-21 13:29:54
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர...

2026-04-21 13:03:48
news-image

“7 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!"...

2026-04-21 12:54:12