நாட்டில் ஜனவரி மாதத்தின் 01 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 113 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனவரி மாதத்தின் 01 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 120 பேர் உயிரிழந்துள்ளதுடன் 216 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துக்களினால் பெரும்பாலும் பாதசாரிகளே உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆகும்.
அத்துடன், அதிகளவில் 45 மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் 7 சைக்கிள் விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM