காலி மாவட்ட செயலாளர் பதவிக்கு கே.யூ.சந்திரலாலை நியமிக்க அமைச்சரவை அனுமதி 

20 Jan, 2026 | 07:13 PM
image

காலி மாவட்டச் செயலாளர் - அரசாங்க அதிபர் பதவிக்கு கே.யூ.சந்திரலாலை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

தற்போது காலி மாவட்டச் செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும்  கடமையாற்றுகின்ற டபிள்யூ.ஏ.தர்மசிறி 2026.01.25 ஆம் திகதியுடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். 

இந்நிலையில் அந்தப் பதவிக்கு தென்மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, கிராமிய அபிவிருத்தி, கலாசார மற்றும் கலைகள் விவகார, சமூக நலன்புரி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள், மகளிர் விவகார மற்றும் பொருளாதார மேம்பாடு, வீடமைப்பு மற்றும் கட்டுமானம் மற்றும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான கே.யூ.சந்திரலால் என்பவரை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கே.யூ.சந்திரலாலை குறித்த பதவிக்கு நியமிப்பதற்கு பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32