(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
மத்திய அதிவேக நெடுஞ்சாலை பாதை புனரமைப்பின் போது படுகரந்த மரத்தை அகற்றாத காரணத்தால் ஏற்பட்ட தாமதத்துக்கு சீன நிறுவனம் 980 மில்லியன் ரூபா நட்டஈட்டை கோரியுள்ளது. இந்த மரத்துக்கு ஆதரவாக பேசிய வனவளத்துறை அதிகாரி தேவானியிடம் இந்த நட்டஈட்டை அறவிட வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் ஏழ்மை நிலையில் இருந்து மக்களை மீட்பதற்கு பல திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. இந்த அரசாங்கம் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது வரவேற்கத்தக்கது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெறாதவர்களின் நலன் தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்காக பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும், மின்கட்டணத்தை குறைப்பதாகவும் குறிப்பிட்டார்.சகல வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடினும் குறைந்தபட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளையேனும் குறைக்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் போது மத்திய அதிவேக நெடுஞ்சாலை புனரமைப்பின் போது கம்பஹா பகுதியில் புனரமைப்பு திட்ட எல்லையில் இருந்த படுகரந்த மரத்தை அகற்றுவதற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்தன. வனவளத்துறை அதிகாரியான தேவானி இதற்கு முன்னின்று செயற்பட்டார்.இந்த மரத்தால் சீன நிறுவனம் அபிவிருத்தி பணிகளை இடைநிறுத்தியது.
படுகரந்த மரத்தால் ஏற்பட்ட தாமதத்துக்கு சீன நிறுவனம் தற்போது நட்டஈடாக 980 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளது. வனவளத்துறை அதிகாரியான தேவானியிடமிருந்து இந்த நட்டஈட்டுத் தொகையை அரசாங்கம் அறவிட வேண்டும்.அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு இதுவொரு பாடமாக இருக்கும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM