மலையக சமூகத்தின் காணி, வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதை ஜி.எஸ்.பி. வரிச்சலுகைகளுக்கான ஒரு நிபந்தனையாக முன்னிறுத்த வேண்டும் - பிரான்ஸிடம் மனோ கணேஷன் வலியுறுத்தல்

20 Jan, 2026 | 05:40 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நாடான பிரான்ஸ், இலங்கைக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகளுக்கான ஒரு நிபந்தனையாக மலையக சமூகத்தின் காணி மற்றும் வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் வலியுறுத்தியுள்ளார்.

மலையக சமூகம் சார்ந்த அநீதிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ஒரு சந்திப்பை நடத்துமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி விடுத்த பல கோரிக்கைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்டை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர், அரசாங்கத்தின் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வீட்டுத்திட்ட முன்முயற்சியின் கீழ், மலையக இலங்கையர்களை, குறிப்பாகத் தோட்டப்புற குடியிருப்பாளர்கள் சமமான முறையில் நடத்தப்படாமல் புறக்கணிக்கப்படுவது குறித்துத் தமது கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மனோ கணேசன் தனது சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில், தித்வா புயலால் மலையக மக்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நாம் தூதுவரிடம் உண்மைகளைத் தெளிவுபடுத்தினோம். தித்வா புயலால் மலையக இலங்கையர்கள், குறிப்பாகத் தோட்டப்புற குடியிருப்பாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், அரசாங்கத்தின் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வீட்டுத்திட்டத்தின் கீழ் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர்.

உத்தியோகபூர்வ வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட வேண்டிய 5 மில்லியன் ரூபா நிதியுதவி மற்றும் காணி ஒதுக்கீடு ஆகியவை மலையகச் சமூகத்திற்கு இன்னும் மறுக்கப்பட்டு வருகின்றன. இது வெறும் கவனக்குறைவு அல்ல. இது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடாகும்.

இவ்வாறான சமூகம் சார்ந்த அநீதிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ஒரு சந்திப்பை நடத்துமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி விடுத்த பல கோரிக்கைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும், மலையக மக்களுக்கு சமமான உரிமைகள், வளங்கள் மற்றும் கௌரவத்தை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரான்ஸிடம் நாம் வலியுறுத்தினோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நாடான பிரான்ஸ், மலையக சமூகத்தின் காணி மற்றும் வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கைக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகளுக்கான ஒரு நிபந்தனையாக முன்னிறுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான...

2026-02-14 13:31:04
news-image

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருளுடன் டிங்கி படகு...

2026-02-14 13:37:51
news-image

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின்...

2026-02-14 13:35:50
news-image

இலங்கை பாடசாலைகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள்...

2026-02-14 13:30:06
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்...

2026-02-14 13:15:11
news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17