கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி 

20 Jan, 2026 | 04:33 PM
image

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப் பற்றாக்குறை, வறுமை மற்றும் குறை விவசாய உற்பத்தித்திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, கருத்திட்டப் பிரதேசத்தில் நிலவுகின்ற குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வாக உத்தேச கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2026 தொடக்கம் 2031 இறுதி வரையான காலப்பகுதியில் கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கும், கருத்திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீட்டை 23,456 மில்லியன் ரூபாய்களாக திருத்தம் செய்வதற்கும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கிவுல்ஓயா நீர் வளத்தை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தி வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை, வறுமை, குறை விவசாய உற்பத்தித்திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2011.09.28 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அப்போதைய மதிப்பீட்டுச் செலவாக 4,170 மில்லியன் ரூபாய் கருத்திட்டமானது, மகாவலி நீர்த்தேக்க அபிவிருத்திக் கட்டமைப்பின் ‘டு’ வலயத்தில் 4 ஆண்டுகளில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டிருப்பினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அக்கருத்திட்டத்தை 2023.12.31 அன்று தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே இத்திட்டத்தை மீள நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நீதித்துறை இன்னும் சீரழியவில்லை என்பதை அத்துகோரல...

2026-02-12 16:18:54
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15