வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 200 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்டத் தொழிலாளர்களுக்கு நேரடியாக வழங்க உத்தேசம்

20 Jan, 2026 | 03:19 PM
image

(எம்.மனோசித்ரா)

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான 2026 வரவு - செலவு திட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

அதற்கமைய வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 200 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை 6 மாதங்களின் பின்னர் நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை 1,550 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு 200 ரூபா வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2026 வரவு - செலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

அதற்கமைய, குறித்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி 2026 ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 1ஆம்  திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 6 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த முறைமையை பின்பற்றி குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21