நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை - பலர் கைது!

20 Jan, 2026 | 04:27 PM
image

நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 29504 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 16 பேரும், சந்தேகத்தின் பேரில் 578 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 282 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 177 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 61 சாரதிகளும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 427 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4384 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45