மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மார்ச் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

20 Jan, 2026 | 02:44 PM
image

(செ.சுபதர்ஷனி)

ஊழல் மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுக்களை, எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், லங்கா சதொச நிறுவனம் ஊடாக 14 ஆயிரம் கரம் போர்டுகள் மற்றும் 11 ஆயிரம் தாயக்கட்டைகளை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

மேல் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (20) உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், குறித்த மனுக்கள் மீதான விரிவான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டது.

அரச நிதியை முறைகேடாகப்  பயன்படுத்தியமை மற்றும் ஊழல் மோசடியில் ஈடுப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர்கள், மேல் நீதிமன்றின் தீர்ப்பு சட்ட ரீதியாக வலுவற்றது எனத் தெரிவித்து அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53
news-image

முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா...

2026-09-15 14:13:00