(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
புதிய கல்விக் கொள்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதிய கல்வி கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும். தற்போது அமுல்படுத்தியுள்ள கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்துக் கொண்டு புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும்.அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தற்காலிக நிகழ்ச்சி நிரலாகவே 2023 ஆம் ஆண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. சமூக கட்டமைப்பில் ஏழ்மையை இல்லாதொழிப்பதற்காகவே அஸ்வெசும நலன்புரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தை இந்தாண்டுடன் நிறைவுப்படுத்த 2023 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் தற்போதைய சமூக பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளர்கள் தெரிவு தொடர்பில் மாறுப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகிறது.கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியற்ற 58 சதவீதமானோருக்கு கொடுப்பனவு வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது.இந்த தவறு திருத்தப்பட வேண்டும்.
பயனாளர் தெரிவு தொடர்பில் தற்போது புதிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கைக்கு அமைய புதிய பயனாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறோம். அரசாங்க நிதி பற்றிய குழு ஊடாக இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதிய கல்வி கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும். தற்போது அமுல்படுத்தியுள்ள கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்துக் கொண்டு புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும்.அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM