(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சரியான நேரத்தில் சரியான முறையில் முன்வைக்க நடவடிக்கை எடுப்போம். இந்த பிரேரணையை எப்போது முன்வைப்பது என்பதனை எதிர்க்கட்சியே தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கையெழுத்திடப்படுவதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் இதுவரையில் முன்வைக்கப்படாமல் இருப்பது தொடர்பில் ஆளும் கட்சியினரால் செவ்வாய்க்கிழமை (20) சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் உள்ளன. அரசியலமைப்பில் அது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. அதற்கான காலம், நேரம், இடம் தொடர்பில் எதிர்க்கட்சியே தீர்மானிக்க வேண்டும். இதனை அரசாங்கம் தீர்மானிக்க முடியாது. அரசாங்கம் கூறும் நேரத்தில், கூறும் இடத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை செயற்படுத்துவதற்கு நாங்கள் தயாரில்லை.
நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை சரியான நேரத்தில், சரியான முறையில் கொண்டுவருவோம். இதில் இன்னும் கையெழுத்திடாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அந்த கையெழுத்துகளை பெற்று முறையாக நாங்கள் அதனை முன்வைப்போம்.
இதேவேளை கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் இரண்டுநாள் அல்ல, நாளை முதல் (இன்று முதல்) மூன்று நாட்களுக்கு விவாதத்தை நடத்தினாலும் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதேபோன்று தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிவாரணங்கள் இதுவரை வழங்கப்படாமல் இருப்பது தொடர்பில் எதிர்க்கட்சி சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை இந்த வாரம் கொண்டுவர இருக்கிறோம். அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் அந்த வாரம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் விவாதித்து, அடுத்தவாரம் அனர்த்தம் தொடர்பில் விவாதிப்பதற்கு நாங்கள் தயார் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM