முன்னாள் நீதி அமைச்சர் விஜ­ யதாச ராஜ­ப­க் ஷவை கூட்டு எதி­ர­ணியில் இணைத்­துக்­கொள்­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக கூட்டு எதி­ர­ணியின் செயற்­பாட்­டா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான குமார வெல்­கம தெரி­வித்­துள்ளார்.

விஜ­யதாச ராஜ­ப­க் ஷ என்­பவர் இலங்­கையின் அர­சி­யலில்  மிக அவசி­ய­மான ஒரு நப­ரா­க­வுள்ளார். எனவே அவரின் தேவையை நாம் அறிந்­து கொண்­டுள்ளோம் அது தொடர்பில் அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அவரின் இணக்­கத்­துடன் கட்­சியில் இணைத்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்றோம்.

Image result for குமார வெல்­கம virakesari

மேலும் இது குறித்து கூட்டு எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சக­ல­ரு­டனும் பேசிய பின்னர் அவர்­க­ளு­டைய தீர்­மா­னத்­தையும் அறிந்­துக்­கொண்டு முன்னாள் நீதி அமைச்­ச­ருடன் பேசு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம் என தெரி­வித்­துள்ளார்.

மேலும் இது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திஸா­நா­யக்க தெரி­விக்­கையில், முன்னாள் அமைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க்ஷவை கட்­சிக்கு அழைப்­பது கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு முர­ணான செயற்­பா­டாக அமையும்.

எனவே கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்படும் நோக்கத்தில் தாம் இல்லை என தெரிவித்துள்ளார்.