படிக்கச் சென்றபோது பரிதாபம்: 13 மாணவர்கள் துடித்து பலி..!

Published By: Digital Desk 3

20 Jan, 2026 | 10:01 AM
image

தென் ஆப்பிரிக்காவின் கௌடெங் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பாடசாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று திங்கட்கிழமை (ஜன.19) காலை, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு பாடசாலைக்கு சென்றது.

வெண்டர்பிஜில் பார்க் நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல ஓட்டுநர் முயன்றுள்ளார்.

அப்போது, எதிரே வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பாடசாலை வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், வேனில் பயணித்த மாணவ-மாணவியர் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக பலியாகினர். பலர், பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த மாணவ-மாணவியரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு, 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 7 மாணவர்கள் மற்றும் வேன் சாரதி தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் உள்ளது.

இந்நிலையில், பலியானோரின் குடும்பத்தினருக்கு அந்நாட்டின் அதிபர் சிறில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32