இந்­தியா, அமெ­ரிக்கா மற்றும் ஈரான் உள்­ளிட்ட 17 நாடுகள் பங்­கு­பற்றும் இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு வியா­ழக்­கி­ழமை கொழும்பில் ஆரம்­பிக்கப்­பட உள்­ளது. இதில் கலந்து கொள்­வ­தற்­காக இந்­தி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி பிரணாப் முகர்ஜி, வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்­திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் பாபு மற்றும் வெளி­யு­றவு செயலர் எஸ். ஜெய­சங்கர் உள்­ளிட்ட உயர் மட்டக் குழு­வினர் புதன் கிழமை இலங்கை வரு­கின்­றனர். 

இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு  31 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மாக உள்­ளது . தொடர்ந்தும் இரண்டு நாட்கள் அலரி மாளி­கையில் இடம்­பெ­ற­வுள்ள  இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்­கி­லேயே இந்­திய மத்­தி­ய­ரசின் வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலை­மை­யி­லான உயர் மட்ட குழு இலங்கை வரு­கின்­றது. 

இதன் போது  மாநாட்டின் பக்க நிகழ்­வு­க­ளாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­ன­ருடன் சிறப்பு சந்­திப்­பு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன. 

இதே வேளை இந்து சமுத்­தி­ரத்தின் பாது­காப்பு ஆதிக்கம் விட­யத்தில் இந்­தியா முன்­பை­விட தற்­போது கூடிய அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கின்­றது. ஆபி­ரிக்க முனை வரை­யான சீனாவின் பட்­டுப்­பாதைத் திட்­டம்­இந்து சமுத்­தி­ரத்தின் இந்­தி­யாவின் ஆதிக்­கத்­திற்கு சவா­லாக அமைந்­துள்­ளது. நிலம் மற்றும் கடல் மார்க்­க­மாக சீனா தனது பட்­டுப்­பாதை இலக்கை மிகவும் வேக­மாக நட்பு நாடு­களின் ஒத்­து­ழைப்­பு­க­ளுடன் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

இதன் அடிப்­ப­டை­யி­லேயே இலங்­கையில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனவின் பட்­டுப்­பாதை திட்­டத்­திற்குள் உள்­வாக்­கப்­பட்­டது. தென்­னி­லங்­கையில் அம்­பாந்­தோட்டை பகு­தியை தனது முழு­மை­யான கண்­கா­ணிப்பின் கீழ் வைத்­தி­ருக்க சீனா திட்­ட­மிட்­டுள்­ளது. இதனால் அங்கு வாழும் மீனவ குடும்­பங்­க­ளுக்கு வீட்­டுத்­திட்டம்  மற்றும் இளை­யோர்­க­ளுக்­கான தொழில் நுட்பக் கல்வி திட்டம் என பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

எனவே இங்­குள்ள நிலை­மை­களை சரி செய்­வ­தற்கும் இந்து சமுத்­தி­ரத்தில் தனது ஆதிக்­கத்தை தொடர்ந்தும் தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­கு­மான நகர்­வு­களை  இந்­தியா எடுத்து வரு­கின்­றது. இலங்­கையின் துறை­முகம் மற்றும் கரை­யோர திட்­டங்­களில் இந்­தியா அக்­க­றை­யின்றி செயற்­பட்­ட­மையின் விளை­வா­கவே சீனாவின் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது என அந்­நாட்டு மூத்த இரா­ஜ­தந்­தி­ரிகள் விமர்­சித்­துள்­ளனர். 

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் இலங்­கையில் இடம்­பெ­ற­வுள்ள இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாட்டை தனக்கு சாத­க­மாக்கிக் கொள்­வ­தற்கு  இந்­தியா முழு மூச்­சுடன் செயற்­ப­டு­கின்­றது. எனவே தான் இரண்டு மத்­திய அமைச்­சர்கள் உட்­பட உயர் மட்டக் குழுவை டில்லி கொழும்­பிற்கு அனுப்­பு­கின்­றது. பல முக்­கிய நாடு­களின் பிர­மு­கர்­களின் பங்­க­ளிப்­புடன் கொழும்பில் நடை­பெ­ற­வுள்ள இந்து சமுத்­திர மாநாட்டில் கடல் பாது­காப்பு சார்ந்த பல விட­யங்கள் குறித்து பொது இணக்­கப்­பா­டு­கள்­எ­டுக்­கப்­பட உள்­ளன.

இந்­நி­லை­யில்­டோக்லாம் விவ­கா­ரத்தில் இந்­தி­யா­விற்கு எதி­ரான பிர­சா­ரத்தை பன்­னா­டு­க­ளிலும் சீனா முன்­னெ­டுத்து வரு­கின்­றது.  இந்­தியா - சீனா - பூட்டான் ஆகிய மூன்று நாடு­களின் எல்லைப் பகு­திகள் இணையும் பகு­தியே டோக்லாம் பீட­பூமி. இது சிக்கிம் மாநி­லத்தின் எல்­லையில் அமைந்­துள்­ளது. இப்­ப­கு­தியில் கடந்த ஜூன் 16-ஆம் திகதி சீனா வீதிப் பணிகளை மேற்கொண்ட நிலையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு பிரிவு இடையூறு செய்வதாகவும் , சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் இந்தியா செயற்படுவதாகவும் தெரிவித்து 15 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சீனத் தூதரகம் வெளியிட்டது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான இராஜதந்திர போரின் வெளிப்பாடுகளாகவே இது அமைந்துள்ளது.