அயர்லாந்தை வெற்றிகொண்ட இலங்கை உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது

Published By: Vishnu

19 Jan, 2026 | 11:35 PM
image

(நெவில் அன்தனி)

விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அயர்லாந்தை 106 ஓட்டங்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது.

ஏற்கனவே ஜப்பானை வெற்றிகொண்ட இலங்கை 3.090 என்ற நிகர ஓட்ட வித்தியாசத்துடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று தனது சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

இக் குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியா நாளைய போட்டியில் ஜப்பானை வெற்றிகொண்டால் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை விளையாடுவது உறுதிசெய்யப்படும்.

இன்றைய போட்டியில் விமத் தின்சார, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில்  முக்கிய பங்காற்றின.

அயர்லாந்துடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஜப்பானுக்கு எதிரான முதல் போட்டியில் சதங்கள் குவித்து  உலகக் கிண்ண சாதனை நிலைநாட்டிய திமன்த மஹாவின்ச, விரான் சமுதித்த ஆகிய இருவரும் ஒற்றை இலக்கை எண்ணிக்கைகளுடனும் துல்னித் சிகேரா 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 3 விக்.)

எனினும், அணித் தலைவர் விமத் தின்சார நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் கவிஜ கமகேயுடன் 80 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சாமிக்க ஹீனட்டிகலவுடன்  100 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையில் இட்டார்.

விரான் சமுதித்த துரதிர்ஷ்டவசமாக 5 ஓட்டங்களால் சதத்தைப் பெறத் தவறினார்.

102 பந்துகளை எதிர்கொண்ட விமத் தின்சார 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 95 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் கெலம் ஆம்ஸ்ட்ரோங் (39), ரூபன் வில்சன் (32), அணித் தலைவர் ஒலிவர் ரைலி (31 ஆ.இ.) ஆகிய மூவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் துல்னித் சிகேரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரசித் நிம்சார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: விமத் தின்சார, 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45