சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு தொடர்பில் புதிய நடவடிக்கைகள் ; தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை

19 Jan, 2026 | 09:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாணிக்கக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்குத் தேவையான மூல மாணிக்கக்கற்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் வரி நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இத்துறை சார்ந்தவர்களுக்குச் சலுகைகளை வழங்குவதையும்,மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டும் இலக்கை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபையின் தலைவர் எஸ்.பி. சமிந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மூல மாணிக்கக்கல் இறக்குமதியின் போது விதிக்கப்படும் வற் வரியைக் கணக்கிடும் முறையை மாற்றி, இறக்குமதியாளர்களுக்கு முன்பை விடப் பெரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது புதிய முன்மொழிவின்படி கொண்டுவரப்படும் ஒரு பொதிக்கு ஒரு குறிப்பிட்ட பெறுமதியை நாங்கள் நிர்ணயிப்போம்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பெறுமதிமிக்க கற்களான ரூபி,சஃபையர் , எமரல்டு  போன்ற வகை கற்களை இறக்குமதி செய்யும் போது, ஒரு கிலோகிராமின் பெறுமதியை சுமார் 900 டொலர்களாக நாங்கள் மதிப்பிடுவோம். அந்த 900 டொலர்களுக்கே வற் வரி கணக்கிடப்படும். அத்துடன்,200 டொலர்களாக இருந்த சுங்கக் கட்டணத்தையும் இந்த புதிய நடைமுறையின் ஊடாக நீக்கியுள்ளோம்.

மாணிக்க கல் அகழ்வு  பகுதிகளை புதிதாக அடையாளப்படுத்துவற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு தொடர்பிலும் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17