அரசியலமைப்புச் சபைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனம் பிரதமருடன் முரண்பாடா ? - எதிர்க்கட்சி தலைவர் மறுப்பு

19 Jan, 2026 | 09:38 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்புச் சபைக்கு மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவொன்றில், சிங்கள வார இதலொன்று வெளியிட்டுள்ள செய்தி பொய்யானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது ஊடகத் தரங்களைக் குறைத்து மதிப்பிடும் வகையில் புனையப்பட்ட ஒரு கதை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய மூன்று சிவில் சமூக உறுப்பினர்களின் பெயர்கள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரால் இணக்கப்பாட்டுக்கு வர முடியவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஏழு பெயர்களைச் சமர்ப்பித்திருந்த அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் 10 பெயர்களை முன்மொழிந்ததாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வெளியேறும் மூன்று சிவில் சமூக உறுப்பினர்களான கலாநிதி அனுலா விஜேசுந்தர, கலாநிதி பிரதாப் ராமானுஜம் மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த வாரம் முடிவடைந்ததையடுத்து, இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசியலமைப்பிற்கமைய, அரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணக்கம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். இந்நிலையிலேயே இது குறித்து வெளியான செய்தியை எதிர்க்கட்சி தலைவர் நிராகரித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32