மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது அரசாங்கத்துக்கு சிறந்ததல்ல - ரவி கருணாநாயக்க

19 Jan, 2026 | 09:39 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை இனியும் இந்த அரசாங்கத்தால் காலம் தாழ்த்த முடியாது. இந்த அரசாங்கம் அரசியலமைப்பிற்கு ஏற்ப செயற்படுவது உண்மையெனில் இவ்வாண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசாங்கத்தின் தொடர்ச்சியான பயணத்துக்கு சிறந்த பாதையல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில்  திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே வெளிநபர்களின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

எவ்வாறிருப்பினும் பொறுத்தமான நேரத்தில் இந்த இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கும். மாகாணசபைத் தேர்தலை இனியும் இந்த அரசாங்கத்தால் காலம் தாழ்த்த முடியாது.

இந்த அரசாங்கம் அரசியலமைப்பிற்கு ஏற்ப செயற்படுவது உண்மையெனில் இவ்வாண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசாங்கத்தின் தொடர்ச்சியான பயணத்துக்கு சிறந்த பாதையல்ல.

உண்மையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தேர்தல் நடத்தப்படவில்லை என்பது தெரியாது. அந்த சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான நிதி காணப்பட்டது.

தாம் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு செல்வதாக இந்த அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. அவ்வாறெனில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை அரசாங்கமே கூற வேண்டும்.

அரசியலமைப்பிற்கமைய செயற்படுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொறுத்தமான ஒருவரை பரிந்துரைக்க தவறியிருக்கிறது. ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர் அரசியலமைப்பு பேரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட 4 பெயர்கள் அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கணக்காய்வு திணைக்களத்துக்கு வெளியிலிருந்து ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்படுகிறது என்றால், அதற்குள் அடுத்தடுத்த நிலைகளில் பொறுத்தமானவர் இல்லை என்பதே அர்த்தமாகும். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51
news-image

செப். 25 முதல் ஒக். 1...

2026-09-15 19:06:41