கவின் உடன் இணையும் சாண்டி மாஸ்டர்

19 Jan, 2026 | 05:50 PM
image

கடந்த ஆண்டில் 'கிஸ்' எனும் தோல்வி படத்தையும், 'மாஸ்க்' எனும் வணிக ரீதியான வெற்றிப் படத்தையும் அளித்த நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில்.. நடனத்திலும், நடிப்பிலும் கவனம் ஈர்க்கும் சாண்டி மாஸ்டர் இணைந்து இருக்கிறார் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கவின் - பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் சாண்டி மாஸ்டர் இணைந்திருக்கிறார்.

இதற்காக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். ஓஃப்ரோ இசையில் தயாராகி வரும் இந்த ஃபேண்டஸி ரொமான்டிக் கொமடி ஜேனரிலான திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் கவின் நடிப்பில் தயாராகி வரும் ஒன்பதாவது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் & சாண்டி மாஸ்டர் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பது.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35