முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மலிந்த புஷ்பகுமார 1000 விக்கெட்கள்

19 Jan, 2026 | 05:05 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் சுழல்பந்துவீச்சாளருமான மலிந்த புஷ்பகுமார முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்களைக் கைப்பற்றி மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.

லும்பிணி கல்லூரியின் பழைய மாணவரான மலிந்த புஷ்பகுமார இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஆவார். அவர் தற்போது பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

முவர்ஸ் கழகத்துடனான போட்டிக்கு முன்னர் 172 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 998 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்த 38 வயதான மலிந்த புஷ்பகுமார, இந்த போட்டியில் பசிந்து சூரியபண்டாரவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் 1000 முதல்தர விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.

அப் போட்டியில் அவர் மொத்தமாக 1005 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதற்கு அமைய மலிந்த புஷ்பகுமார இதுவரை 173 போட்டிகளில் விளையாடி 100?? விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார்.

முத்தையா முரளிதரன் (232 போட்டிகளில் 1374 விக்கெட்கள்), ரங்கன ஹேரத் (270 போட்டிகள், 1080 விக்கெட்கள்), தினூக்க ஹெட்டிஆராச்சி (234 போட்டிகள், 1000 விக்கெட்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 1000 முதல் தர விக்கெட்களைப் பூர்த்தி செய்த நான்காவது வீரர் மலிந்த புஷ்பகுமார ஆவார்.

சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பிறீமியர் லீக் ஏ அடுக்கு கிரிக்கெட் போட்டியில் 37 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அப்போது அவர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45