ஏகப்பட்ட கோல்களைத் தவறவிட்ட சென்.மேரிஸ் கழகம் சுப்பர் 8 சுற்று வாய்ப்பை பெற போராட வேண்டிவரும்

Published By: Digital Desk 3

19 Jan, 2026 | 04:35 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற பொலிஸ் கழகத்துக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் பி குழு கால்பந்தாட்ட போட்டியில் கிட்டத்தட்ட 15 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டு 0 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் இப் போட்டிக்கு முன்பதாக சுப்பர் 8 சுற்று வாயிலை நெருங்கி இருந்ததுடன் சென். மேரிஸ் கழகத்துக்கு வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்பட்டது. ஆனால், பொலிஸ் கழகம் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இரண்டு அணிகளும் வெற்றியை குறியாகக் கொண்டு ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய வண்ணம் இருந்தன.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் கழகத்தின் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட பொலிஸ் கழகம் சார்பாக சாலக்க நிஷான்த இலகுவான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

வழமையான கோல் காப்பாளர் ஆர்னிகன் அணியில் இடம் பெறாதது சென். மேரிஸ் கழகத்துக்கு சிறு தாக்கத்தைக் கொடுத்தது.

அதன் பின்னர் சென். மேரிஸ் கழகம் எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. அதேவேளை, குறைந்தபட்சம் 5 இலகுவான கோல் போடும் வாய்ப்புகள் உட்பட ஏகப்பட்ட வாய்ப்புகளை சென். மேரிஸ் வீரர்கள் தவறவிட்டனர்.

இந் நிலையில் சென். மெரிஸ் கழகம் சுப்பர் 8 சுற்று தகுதியைப் பெறுவதாக இருந்தால் கடுமையாக போராடவேண்டிவரும்.

இதுவரை பி குழுவில் தோல்வி அடையாமல் இருக்கும் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்தையே தனது கடைசிப் போட்டியில் சென். மேரிஸ் கழகம் அடுத்த வாரம் எதிர்த்தாடவுள்ளது.

சொண்டர்ஸ் இலகுவான வெற்றி

நடப்பு உப சம்பியன் ஜாவா லேன் கழகத்திற்கு எதிராக இதே மைதானத்தில் இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழு போட்டியில் சோண்டர்ஸ் கழகம் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றியீட்டியது.

சோண்டர்ஸ் சார்பாக க்ளோவிஸ் ப்ரான்க் (11 நி.), ரொஜர் பிலிப்பே (45 10 1 நி.), ஸியார்ட் முபாஸில் (65 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

அப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் மத்தியஸ்தர் நிவொன் ரொபேஷின் சிவப்பு அட்டைக்கு சோண்டர்ஸ் வீரர் எம். ப்ரியதர்ஷன அநாவசியமாக இலக்கானார்.

இந்த வாரப் போட்டி முடிவுகளுடன் ஏ குழுவிலிருந்து சோண்டர்ஸ், நியூ ஸ்டார், செரெண்டிப் ஆகிய கழகங்களும் பி  குழுவிலிருந்து   தோல்வி அடையாமல் இருக்கும் பெலிக்கன்ஸ் (11 புள்ளிகள்), சொலிட் (10), பொலிஸ் (9)  ஆகிய கழகங்களும்   சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

ஏனைய போட்டி முடிவுகள்

நிகம்போ யூத் 3 - இ.போ.ச. 1

பெலிக்கன்ஸ் 0 - சுப்பர் சன் 0

செரெண்டிப் 4 - கிறிஸ்டல் பெலஸ் 1

சொலிட் 4 - மாத்தறை சிட்டி 0

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45