பாகிஸ்தானில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளார்கள்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வணிக வளாகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாக கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது.
இந்த விபத்தில் சிக்கி 06 பேர் உயிரிழந்ததாவும், பலர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் தெரிவித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கடை ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல கடைகளுக்கும் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.
தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 08 உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
தீவிர போராட்டத்திற்கு பின்னர் நேற்றிரவே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீப்பிடித்து, கரும்புகை பரவி அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், மீட்பு குழுவாலும் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், தீ அணைக்கப்பட்ட பின்னர், உள்ளே சென்று பார்த்ததில், உடல் கருகிய நிலையில் 08 பேர் உயிரிழந்து கிடந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் 07 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.
எல்லா தளங்களிலும் மொத்தம் 1,200 கடைகள் கொண்ட இது பழைய கட்டிடம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனினும், 70 பேர் இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருக்கின்றனர் என ஊடக தகவல் தெரிவிக்கின்றது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்த வணிக வளாகம் அருகே அமைந்த கட்டிடத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென தீ 2 தளங்களுக்கு பரவியது. எனினும், உடனடியாக தீ அணைக்கப்பட்டது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM