ஐசிசி 19இன் கீழ் ஆண்கள் உலகக் கிண்ணம்: சுப்பர் சிக்ஸ் சுற்றை குறிவைத்து அயர்லாந்தை எதிர்கொள்கிறது இலங்கை

Published By: Digital Desk 3

19 Jan, 2026 | 01:07 PM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயிலும் நமிபியாலும் கூட்டாக நடத்தப்படும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்  சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் குறிக்கோளுடன் ஏ குழுவில்  இலங்கை   தனது இரண்டாவது போட்டியில் அயர்லாந்தை இன்று எதிர்த்தாடுகிறது.

இப் போட்டி விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஜப்பானுக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து  வெற்றியீட்டிய இலங்கை இளையோர் அணி, இன்றைய போட்டியிலும் அதே திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிக்கவுள்ளது.

அந்தப் போட்டியில் சதங்கள் குவித்து 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சாதனைகளை நிலைநாட்டிய விரான் சமுதித்த, திமன்த மஹாவித்தான ஆகிய இருவரும் இன்றைய தினம் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடினால் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.

மேலும் ஜப்பானுடனான போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய தினமும் இலங்கை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் மாற்றம் இடம்பெறுவதாக இருந்தால் வேகப்பந்துவீச்சிலேயே அந்த மாற்றம் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

19 வயதின்கீழ் இலங்கை குழாம்

திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த, துல்னித் சிகேரா, விமத் தின்சார (தலைவர்), கவிஜ கமகே (உப தலைவர்), சாமிக்க ஹீனட்டிகல, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன, ரசித் நிம்சார, விக்னேஸ்வரன் ஆகாஷ், ஸ்ரீராம் ஜீவகன், சமரிந்து நெத்சார, குகதாஸ் மாதுளன், சேனுஜ வேக்குனாகொட, மலின்த சில்வா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை...

2026-07-22 14:53:25
news-image

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார்...

2026-07-22 14:16:34
news-image

பங்காளாதேஷ் இன் டாக்கா இல் நடைபெற்ற...

2026-07-22 12:55:39
news-image

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது இளையோர் டெஸ்ட்...

2026-07-22 08:59:09
news-image

கண்டி றோயல்ஸ் 43 ஓட்டங்களால் வெற்றி

2026-07-22 08:57:13
news-image

சீ ஹோக்ஸ் அணிக்கு இறுக்கமான வெற்றி;...

2026-07-21 21:49:39
news-image

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட...

2026-07-21 15:14:26
news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41