சீனாவில் தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் ; இருவர் பலி ; 84 பேர் காயம்

Published By: Digital Desk 3

19 Jan, 2026 | 12:44 PM
image

வடக்கு சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 84 பேர் காயமடைந்து, எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்பு சம்பவம் மங்கோலிய எல்லையின் உட் பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 3:00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.  இதனால் அப்பகுதியில் சிறு நிலஅதிர்வும் ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து  வானத்தில் பாரிய புகை மூட்டங்கள் சூழ்ந்ததோடு, தொழிற்சாலையின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். வெடிப்பு சம்பவத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலை சீன அரசாங்கத்துக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை ஆகும்.

சீனாவில்  தொழிற்சாலை வெடிப்புகள், சுரங்க இடிபாடுகள் முதல் மண் சரிவுகள் வரை தொழில்துறை சார்த்த விபத்துக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது.

2015 ஆம் ஆண்டில், தியான்ஜின் துறைமுகத்தில் நடந்த இரண்டு பெரிய வெடிப்பு சம்பவங்களில் 173 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அத்துடன்,  நகரத்தின் பெரிய பகுதிகள் சேதமடைந்தன.

கடந்த ஆண்டு மே மாதம், கிழக்கு மாகாணமான ஷான்டாங்கில் உள்ள இராசாயன தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில்  ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32