(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கு எதிராக இந்தூர் ஹொல்கார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற தீர்மானம் மிக்க மூன்றாவதும் கடைசியுமான சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டெரில் மிச்செல், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் 41 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றியீட்டியது.
இதன் மூலம் இந்திய மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து முதல் தடவையாக கைப்பற்றியது.
வதோராவில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 4 விக்கெட்களால் தோல்வி அடைந்து 0 - 1 என்ற ஆட்டக் கணக்கில் பின்னிலையில் இருந்த நியூஸிலாந்து, ராஜ்கொட்டில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 7 விக்கெட்களால் இப்போது இந்தூரில் 41 ஓட்டங்களாலும் வெற்றிபெற்று தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.
உபாதைகள் காரணமாக பிரதான வீரர்கள் இல்லாமல் இந்தியாவுக்கு விஜயம் செய்த நியூஸிலாந்து அணியினர் மிகச் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வெற்றியிட்டி தொடரைக் கைப்பற்றினர்.

இந்தத் தொடரில் டெரில் மிச்செல் தனது இரண்டாவது சதத்தைக் குவித்து நியூஸிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றி இருந்தார்.
கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 337 ஓட்டங்களைக் குவித்தது.
ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த டெரில் மிச்செல், க்ளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் நான்காவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 219 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தை பலப்படுத்தினர்.
டெரில் மிச்செல் 131 பந்துகளில் 15 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 137 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 88 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட வில் யங் 30 ஓட்டங்களையும் அணித் தலைவர் மைக்கல் ப்றேஸ்வெல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் விளையாடாத நிலையில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 84 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மிகவும் கடினமான 338 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 46 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
13ஆவது ஓவரில் இந்தியா 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.
ஆனால், இந்தியாவின் துடுப்பாட்ட நட்சத்திரம் விராத் கோஹ்லி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் நிட்டிஷ் குமார் ரெட்டியுடன் 5ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களையும் ஹர்ஷித் ரானாவுடன் 7ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களையும் பகிர்ந்து இந்தியாவுக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தார்.

ஆனால் கோஹ்லி 9ஆவதாக ஆட்டம் இழந்ததும் இந்தியாவின் நம்பிக்கை தவிடுபொடியானது.
விராத் கோஹ்லி 108 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார்.
நிட்டிஷ் குமார் ரெட்டி 53 ஓட்டங்களையும் ஹர்ஷித் ரானா 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
வேறு எவரும் 25 ஓட்டங்களை எட்டவில்லை.
பந்துவீச்சில் கிறிஸ்டியன் க்ளார்க் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸக் ஃபோக்ஸ் 77 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேடன் லெனொக்ஸ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: டெரில் மிச்செல் (2 சதங்களுடன் 352 ஓட்டங்கள்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM