(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்தும் ஆப்கானிஸ்தானும் தத்தமது இரண்டாவது வெற்றிகளை ஈட்டி சுப்பர் சிக்ஸ் வாய்பை அதிகரித்துக்கொண்டுள்ளன.
அதேவேளை ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவு கிட்டவில்லை.

ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சி குழு போட்டியில் ஸிம்பாப்வேயை 8 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சிம்பரஷே மட்ஸெங்கெரெரே (45 ஆ.இ.), துருவ் பட்டேல் (36), கியான் பிலிங்நோட் (33), டெட்டெண்டா சிமுகோரோ (30 ஆகியோர் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மெனி லம்ஸ்டென் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அதன் முதல் இரண்டு விக்கெட்களை 42 ஓட்டங்களுக்கு இழந்தது.
ஆனால், அணித் தலைவர் தோமஸ் ரியூ (86 ஆ.இ.), பென் மேயெஸ் (77 ஆ.இ) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
பந்துவீச்சில் ஷெல்டன் மஸ்விட்டோரேரா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ.
ஆப்கானிஸ்தான் வெற்றி
விண்ட்ஹோக் ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணியை எதிர்த்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 138 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்களைக் குவித்தது.

காலித் அஹ்மத்ஸாய் (34), ஒஸ்மான் சதாத் ஆகிய இருவரும் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர.
இந் நிலையில் சீரான இடைவெளியில் 3 விக்கெட்கள் சரிந்தன.
ஆனால், ஒஸ்மான் சதாத் (88), அணித் தலைவர் மஹ்பூப் கான் (86) ஆகிய இருவரும் 77 ஒட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
மத்திய வரிசையில் அஸிஸ்உல்லா மியாக்கில் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஜக்கீன் பொல்லார்ட் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விட்டெல் லோவெஸ் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஜுவெல் அண்ட்றூ (57), ஜக்கீம் பொல்லார்ட் (11) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்சாய் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் காதிர் ஸ்டானிக்சய் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வாஹிதுல்லா ஸத்ரான் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மெஹ்பூப் கான்
போட்டியில் முடிவில்லை
புலாவாயோ, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண டி குழு போட்டியின் இடையில் மழை பெய்ததால் ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்க இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.

22 ஓவர்கள் நிறைவில் ஐக்கிய அமெரிக்கா 6 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.
ஆனால், 7ஆம் இலக்க வீரர் நிட்டிஷ் சுதினி அபார சதம் குவித்ததுடன் 8ஆம் இலக்க வீரர் ஆதித் கப்பாவுடன் 7ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
நிட்டிஷ் சுதானி 133 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 117 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் கடைசி 28 ஓவர்களில் நான்கு வீரர்களுடன் 156 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஆதித் கப்பா 40 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ப்ளின் மோரி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மேசன் க்ளார்க் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து இளையோர் அணி ஒரு ஓவரில் 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் பழை பெய்ததால் அதன் பின்னர் ஆட்டம் தொடரப்டாமல் கைவிடப்பட்டது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM