கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை தாக்கிய கும்பல் - வியாபாரி உட்பட 6 பேர் கைது!  

18 Jan, 2026 | 06:40 PM
image

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரியை கைது செய்ய முற்பட்ட பொலிஸாரை தாக்கி, கசிப்பு வியாபாரியை கைது செய்யவிடாமல் தடுத்து, கைகலப்பில் ஈடுபட்டு, வியாபாரியை தப்பி ஓட வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்பு தோட்டம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (17)  மாலை 4.30 மணியளவில் பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 62 வயதுடைய நபரை 180 மில்லி கிராம் கசிப்புடன் கைது செய்து கொண்டு செல்வதற்கு பொலிஸார் முயற்சித்தபோது, வியாபாரியின் உறவினர்களான பெண்கள் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரை தள்ளி வீழ்த்தி தடுத்து, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை சந்தர்ப்பம் பார்த்து, வியாபாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பொலிஸாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டதையடுத்து பொலிஸார் அவர்களை வீடியோ, படம் எடுத்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இந்நிலையில் பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் அங்கிருந்து கரடியனாறு பகுதிக்குள் தப்பி ஓடிய நிலையில் அவரை கரடியனாறு பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கடமையை செய்ய விடாது தடுத்த மற்றும் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளின் கீழ்  3 பெண்கள் உட்பட 5 பேரை இன்று  பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44
news-image

கெப்பித்திகொல்லாவயில் காட்டு யானை தாக்கி இருவர்...

2026-09-05 11:38:53
news-image

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலை...

2026-09-05 11:21:34
news-image

தொம்பே பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத...

2026-09-05 11:18:09
news-image

வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் இளம் சாரதிகள்!...

2026-09-05 11:08:02