நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் ; ஹர்ஷன ராஜகருணா

18 Jan, 2026 | 07:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றன. அதனால் நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என ஜனாதிபதி மற்றும்  அரசாங்கத்தை  கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

ஜனாதிபதி வடக்குக்கு சென்று தெரிவித்திருந்த கருததுக்கள் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (18)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் இனவாத்தை தூண்டாமல் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றாக எழுந்திருக்க வேண்டும்.

தெற்கில்  ஒருவிதமாகவும் வடக்குக்கு சென்று அதனை வேறு  விதமாகவும் சொல்லி, நாட்டு மக்களை ஏமாற்றுவதை தற்போதாவது நிறுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்காெள்கிறோம்.

வடக்குக்கு சென்று பாரியளவில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அதனை தெற்கில் விமர்சிக்கின்றனர். அதேநேரம் தமிழ், சிங்களம் முஸ்லிம் என பார்க்காமல் நாங்கள் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இனவாதத்தை தூண்டுவதில்லை என அரசாங்கம் தெரிவித்துவருகின்றபோதும். ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாதத்தை தூண்டிவருகிறது. அதனால் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என தயவாக  கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் எமது நாட்டு பெளத்தர்கள் நாட்டில் இருக்கும் எந்த விகாரைக்கு வழிபடச் சென்றாலும் அவர்கள்  வைராக்கியத்துடன் செல்வதில்லை. ஜனாதிபதியே வைராக்கியத்துடன் செல்கிறார். வைராக்கியத்தை பரப்புவதும் ஜனாதிபதியும் அவரது சீடர்களுமாகும்.

நாங்கள் நாகதீபம், சிறிமாபோதி, களனி விகாரைக்கு செல்வது வழிபடுவதற்காகும். மாறாக  வைராக்கியத்துடன்  யாரும் செல்வதில்லை. வைராக்கியத்தை பரப்ப வேண்டும் என்றால்  நாகதீபத்துக்கு செல்ல தேவையில்லை, கொழும்பில் இருந்து பரப்ப முடியும்.

ஜனாதிபதி, ஆட்சிக்கு வரும் முன்னர் தெரிவித்த எதனையும் தற்போது செயற்படுத்துவதில்லை. தலதா மாளிகைக்கு  செல்லும்போது ஊடகங்களை அழைத்துச்செல்வதில்லை என்றே தெரிவித்திருந்தார்.

ஊடகங்கள் இல்லாமலே நாங்கள் தலதா வழிபடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவ்வாறா இடம்பெறுகிறது? ஊடகங்களை அழைத்துக்கொண்டே மத வழிபாடுகளுக்கு செல்கிறார்.

ஹெலிகொப்டரில் செல்வதில்லை என தெரிவித்தார்கள். ஹெலிகொப்டர் இரண்டு எடுத்துச் செல்வது, பாய்வதற்காக என அன்று கேட்டார்கள். ஆனால் இன்று ஹெலிகொப்டர் இரண்டு எடு்த்துச்செல்கிறார்கள்.

அதனால் இவர்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் தெரிவித்த எதனையும் செயற்படுத்துவதாக இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருளுடன் டிங்கி படகு...

2026-02-14 13:37:51
news-image

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின்...

2026-02-14 13:35:50
news-image

இலங்கை பாடசாலைகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள்...

2026-02-14 13:30:06
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்...

2026-02-14 13:15:11
news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55