கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

18 Jan, 2026 | 05:25 PM
image

(செ.சுபதர்ஷனி)

மாலிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் முறையற்ற நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜனவரி 21ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 22ஆம் திகதி காலை 8.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாலிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும்,  குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவரை தற்காலிகமாக பதவி நீக்க செய்ய வேண்டும் எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு பலமுறை எழுத்துப்பூர்வமாக அறிவித்தும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 140 வைத்தியசாலைகளில்  பணிப்புரியும் கதிரியல் தொழில்நுட்ப  வல்லுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர்.  இதனால் அன்றையதினம் கதிரியல் சிகிச்சை சேவைகள் முற்றிலும் ஸ்தம்பிக்க உள்ளது. சிரி ஸ்கேன்,எம்.ஆர்.ஐ  ஸ்கேன், எக்ஸ்ரே , மெமோகிராம் மற்றும் அறுவை சிகிச்சைகள் கூட இதனால் முடங்கக் கூடும்.

எவ்வாறாயினும் நோயாளர்களைக் கருத்தில் கொண்டு புற்றுநோய் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சை பிரிவுகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06
news-image

சர்ச்சையை ஏற்படுத்திய மகா சங்கத்தினரின் கடிதம்...

2026-08-12 14:28:29