கிளிநொச்சி பொதுச்சந்தை துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம்

Published By: Priyatharshan

26 Aug, 2017 | 12:18 PM
image

கிளிநொச்சி, பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

குறித்த பொதுச் சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்ணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவனைக்கு கையளிக்கப்படவில்லை எனவும், 380 வர்த்தகர்கள் மற்றும் அங்கு வருகைதரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த  பகுதியில் சுகாதார  சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும்,  துர்நாற்றத்திலிருந்து  பொதுச்சந்தை விடுபடவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறான நிலையில் தொற்று நோய்களிற்கும், சுவாச நோய்களிற்கும் மக்கள் ஆளாகும் முன்னர், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25
news-image

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு...

2026-04-11 10:16:50
news-image

தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில்...

2026-04-11 10:57:45