அனுராதபுரத்தில் ஆரம்பமான Lanka Ride 3ஆம் நாள் போட்டி : இராணுவ வீரர் ஏ.டி.எஸ்.பெரேரா மூன்று பதக்கங்களை வென்று சாதனை!

Published By: Digital Desk 1

18 Jan, 2026 | 02:42 PM
image

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட Lanka Ride சைக்கிள் போட்டியின் மூன்றாவது நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணிக்கு அனுராதபுரம் நகரில் ஆரம்பமானது. 

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் இந்த போட்டி ஆரம்பமானது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத், அனுராதபுரம் மேயர் என். கருணாரத்ன, மாகாண பொலிஸ் தலைவர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் குழு உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று சனிக்கிழமை (17) சிறப்பாகச் செயல்பட்ட சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இதில் இலங்கை இராணுவ அணியின் தடகள வீரர் ஏ.டி.எஸ். பெரேரா,  மூன்று பதக்கங்களை வென்றமை சிறப்பம்சமாகும்.

நேற்று, ஜா-எல ஃப்ளாஷ் அணியின் தேஷன் கவிந்தவுக்கு 23 வயதுக்குட்பட்ட சிறந்த இளம் சைக்கிள் ஓட்டுநர் என்ற பதக்கம் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டி தற்போது புத்தளம் வழியாக கொழும்பை அடையவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45