பங்களாதேஷை DLS முறைமையில் வென்றது இந்தியா

18 Jan, 2026 | 06:19 AM
image

(நெவில் அன்தனி)

புலாவாயோ, குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று சனிக்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண சி குழு போட்டியில் பங்களாதேஷை டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் 18 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை இந்தியா ஈட்டியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா சிரமத்துக்கு மத்தியில் 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 3 விக்கெட்ளை 53 ஓட்டங்களுக்கு இழந்த இந்தியா பெரும் நெருக்கடிக்குள்ளானது.

ஆனால் வைபவ் சூரியவன்ஷி. அபிக்யான் குண்டு  ஆகிய இருவரும்  4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு ஆறுதல் அளித்தனர்.

வைபவ் சூரியவன்ஷி 67 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. (119 - 5 விக்.)

இந் நிலையில் அபிக்யான் குண்டு, கனிஷ்க் சௌஹான் (28) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிரந்து இந்தியாவுக்கு தெம்பூட்டினர்.

அபிக்யான் குண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் அல் பஹாத் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அஸிஸ்உல் ஹக்கிம் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இக்பால் ஹொசெய்ன் ஈமொன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

239 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது.

அந்த சமயத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தடைப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் பங்களாதேஷின் வெற்றி இலக்கு  29 ஓவர்களில் 165 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து 21. 1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ், அதன் பின்னர் எஞ்சிய 8 விக்கெட்ளை 40 ஓட்டங்களுக்கு இழந்து தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் அஸிஸ்உல் ஹக்கிம் 51 ஓட்டங்களையும் ரிபாத் பெக் 37 ஓட்டங்களையும் கலாம் சித்திக்கி, ரிஸான் ஹொசன் ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஹான் மல்ஹோத்ரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கிலான் பட்டேல் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: விஹான் மல்ஹோத்ரா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45