(நெவில் அன்தனி)
விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இரண்டு இளையோர் உலகக் கிண்ண சாதனைகளை நிலைநாட்டிய இலங்கை 203 ஓட்டங்களால் ஜப்பானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை ஆரம்பித்துள்ளது.


இந்தப் போட்டியில் 192 ஓட்டங்களைக் குவித்த விரான் சமுதித்த, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் தனிநபருக்கான அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்து புதிய சாதனை நிலைநாட்டினார்.
இவர் மாத்தறை சென் செர்வேஷியஸ் கல்லூரி வீரராவார்.
திரித்துவ கல்லூரியின் முன்னாள் வீரர் ஹிசித்த போயகொட 2018இல் நியூஸிலாந்தின் லின்கனில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் கென்யாவுக்கு எதிராக பெற்ற 191 ஓட்டங்கள் என்ற முந்தைய சாதனையை விரான் சமுதித்த முறியடித்தே இந்த சாதனையை நிலைநாட்டினார்.

அத்துடன் தனது சக வீரர் திமன்த மஹாவித்தானவுடன் ஆரம்ப விக்கெட்டில் 328 ஓட்டங்களைப் பகிர்ந்து இளையோர் உலகக் கிண்ணம் மற்றும் இளையோர் சர்வதேச ஒருநாள் ஆகிய இரண்டிலும் சகல விக்கெட்டுகளுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை படைத்தார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 387 ஓட்டங்களைக் குவித்தது.
விரான் சமுதித்த 143 பந்துகளை எதிர்கொண்டு 26 பவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் விளாசி இருந்தார்.
மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய திரித்துவ கல்லூரி வீரர் திமன்த மஹாவித்தான 125 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 115 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குவித்த கன்னிச் சதங்கள் இவையாகும்.
அவர்களை விட அணித் தலைவர் விமத் தின்சார 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் திமத்தி முவர் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் 50 ஓவர்களும் தாக்குப் பிடித்து 8 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய முன்வரிசை வீரர் ஹியூகோ கெலி 162 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 101 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் நிஹார் பாமர் (23) மாத்திரம் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.
பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 8 வீரர்களில் செத்மிக்க செனவிரட்ன (9 - 1 விக்.), சாமிக்க ஹீனட்டிகல (16 - 1 விக்.), விரான் சமுதித்த (17 - 1 விக்.), ரசித் நிம்சார 21 - 1 விக்.), விக்னேஸ்வரன் ஆகாஷ் (42 - 1 விக்.), அறிமுக வீரர் ஸ்ரீ ராம் ஜீவகன் (53 - 1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: விரான் சமுதித்த











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM