மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருவதாலும்.. விஞ்ஞான தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதாலும்.. புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் வகையில் நவீன கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் அறிமுகம் ஆகி இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக திசு பரிசோதனையின் மூலம் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை துல்லியமாக அவதானித்த பிறகு, வைத்திய நிபுணர்கள் சத்திர சிகிச்சை - கதிர்வீச்சு சிகிச்சை - கீமோதெரபி- உள்ளிட்ட ஒருங்கிணைந்த சிகிச்சைகளின் மூலம் நிவாரணம் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கதிர்வீச்சு சிகிச்சையில் புதிய சிகிச்சை முறையாக எக்ஸ்டர்னல் ரேடியேஷன் தெரபி என்ற சிகிச்சை முறை அறிமுகமாகி இருக்கிறது.
இத்தகைய கதிர்வீச்சு சிகிச்சை மூலமாக நோயாளிகளின் புற்றுநோய் கட்டியை துல்லியமாக அவதானித்து அதன் மீது கதிர்வீச்சு சிகிச்சையை செலுத்த இயலும். இதன் மூலம் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவதுடன் அவை வேறு பகுதியில் பரவுவதையும் தடுக்க இயலும். இத்தகைய சிகிச்சையுடன் ஒருங்கிணைந்த சிகிச்சையை இணைந்து வழங்கும் போது புற்றுநோய் கட்டிகளை சுருக்கமடைய செய்து எளிதாக அழிக்க இயலும். மேலும் இத்தகைய சிகிச்சையில் தற்போது ஏழு வகையினதான பிரத்யேக கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் அறிமுகம் ஆகி இருப்பதால் புற்று நோயாளிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்கிறது.
வைத்தியர் பிரசன்னா குமார் தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM