நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட் ' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

17 Jan, 2026 | 05:25 PM
image

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்பிரிட்' படத்தின் வெளியீட்டு திகதியை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பிரிட்' எனும் திரைப்படத்தில் பிரபாஸ், திரிப்தி டிம்ரி, பிரகாஷ் ராஜ்,விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ராஜ் தோட்டா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில் இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 15:21:06
news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35