எக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

17 Jan, 2026 | 05:20 PM
image

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் ' எல்லம்மா ' எனும் படத்தின் மூலம் அதிரடி எக்சன் நாயகனாக திரையுலகில் அறிமுகமாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ காணொளி வெளியிடப்பட்டுள்ளது .

இயக்குநர் வேணு இயக்கத்தில் உருவாகும் ' எல்லம்மா' எனும் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிரீஷ் தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு வழங்குகிறார். 

இசை நிகழ்ச்சிகளிலும் , மேடையிலும்,  திரைப்படங்களிலும் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் தேவி ஸ்ரீ பிரசாத் - மண்ணின் மணம் கமழும் பாரம்பரியம் மிக்க தொன்மையான கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து நாயகனாக அறிமுகமாவதால் ரசிகர்களிடத்தில் ' எல்லம்மா ' பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணத்தினால் இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான இசையமைப்பாளர் மற்றும் நட்சத்திர நடிகராக வலம் வரும் விஜய் அண்டனி¬ மற்றும் ஜீ வி பிரகாஷ்குமார் ஆகியோரைப் போல் புகழ்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34