(நெவில் அன்தனி)
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வெள்ளிக்கிழமை (16) இரவு மின்னொளியில் நடைபெற்ற பெலிக்கன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்ட தர்கா நகர் சுப்பர் சன் கழகத்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
சுப்பர் சன் கழகம் தனது முதல் சுற்றுப் போட்டிகளை நிறைவு செய்துகொண்டுள்ளது.
இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து பி குழுவில் பெலிக்கன்ஸ் கழகம் தொடர்ந்தும் தோல்வி அடையாத அணியாக இருக்கிறது.
அதேவேளை, நிகம்போ யூத் தனது ஐந்தாவது போட்டியில் முதலாவது வெற்றியை சம்பாதித்துக்கொண்டது.
பெலிக்கன்ஸ் கழகத்துடனான போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பதை நன்கு அறிந்திருந்த சுப்பர் சன் கழகம், நேற்றைய போட்டியின் ஆரம்பத்தில் எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது.
முதல் 3 நிமிடங்களில் நான்கு கோணர் உதைகளை பெற்ற சுப்பர் சன் கழகத்தினால் உரிய பலனைப் பெற முடியாமல் போனது.
போட்டியின் 35ஆவது நிமிடத்திலேயே பெலிக்கன்ஸ் கழகம் கோல் போடுவதற்கான முதலாவது முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், அந்த முயற்சி வீண்போனது.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது பெலிக்கன்ஸ் கழகம் இலகுவான கோல் ஒன்றைத் தவறவிட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் குமார கவினாஷ் இடதுபுறத்தில் இருந்து பரிமாறிய பந்தை செல்வம் சதுர்சன் கோலாக்க தவறினார்.
இடைவேளைக்குப் பின்னர் 52ஆம், 66ஆம் நிமிடங்களில் சுப்பர் சன் கழகத்துக்கு கிடைத்த கோல் போடும் வாய்ப்புகளை அதன் வீரர்கள் முறையாகப் பயன்படுத்தத் தவறினர்.
அதேவேளை, பெலிக்கன்ஸ் கோல் காப்பாளர் பாறுக் பௌசான் அருமையாக செயல்பட்டு கோல்களைத் தடுத்து பலத்த பாராட்டுதல்களைப் பெற்றார்.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் பெலிக்கன்ஸ் கழகம் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சியை சுப்பர் சன் கோல் காப்பாளர் ஷாலித்த திலக்கசிறி மிகவும் அபாரமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.

இப் போட்டியில் சிரேஷ்ட வீரர்களான ஈ.பி. சன்ன, பாலகமகே ஷிவன்க ஆகியோர் சுப்பர் சன் சார்பாக தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
அதேவேளை இரண்டு கழகங்களிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் தவறுகளை இழைத்து தத்தமது அணிகளின் வெற்றிகளை இல்லாமல் செய்தனர்.
இப் போட்டியில் பீபா மத்தியஸ்தர் நிவொன் ரொபேஷ் மிகவும் சிறப்பாக மத்தியஸ்தம் வகித்தார்.
நிகம்போ யூத் முதலாவது வெற்றி
இலங்கை போக்குவரத்துச் சபை கழகத்துக்கு எதிராக இதே மைதானத்தில் நடைபெற்ற ஏ குழு போட்டியில் நிகம்போ யூத் கழகம் 3 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
இந்த வருட சம்பியன்ஸ் லீக் போட்டியில் நிகம்போ யூத் பதிவு செய்த முதலாவது வெற்றி இதுவாகும்.
இப் போட்டியில் இ.போ.ச. கழகம் சார்பாக அணித் தலைவர் சண்முகராஜா சஞ்சீவ் 9ஆவது நிமிடத்தில் கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

இந்த சுற்றுப் போட்டியில் இ.போ.ச. கழகம் போட்ட முதலாவது கோல் இதுவாகும்.
ஆனால், 14ஆவது நிமிடத்தில் நிகம்போ யூத் வீரர் சுலக்ஷன பீரிஸ் கோல் நிலையை சமப்படுத்தினார்.
இடைவேளைக்கு பின்னர் ஒரளவு ஆதிக்கம் செலுத்திய நிகம்போ யூத் கழகம் சார்பாக மொஹமத் அக்கிம் (55 நி.), மொஹமத் ரிப்கான் (63 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டு தமது அணியை வெற்றி அடையச் செய்தனர்.
இன்று இரண்டு போட்டிகள்
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று சனிக்கிழமை (17) மேலும் இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
கம்பளை கிறிஸ்டல் பெலஸ் கழகத்துக்கும் மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கும் இடையிலான ஏ குழு போட்டியும் மாத்தறை சிட்டி கழகத்துக்கும் அனுராதபுரம் சொலிட் கழகத்துக்கும் இடையிலான போட்டியும் இன்று நடைபெறவுள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அல்லது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் செரெண்டிப் கழகம் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM