19இன் கிழ் உலகக் கிண்ணத்தில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டும் குறிக்கோளுடன் ஜப்பானை இன்று சந்திக்கிறது இலங்கை

17 Jan, 2026 | 01:07 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு தடவை உப சம்பியனான இலங்கை, இந்த வருடம் ஸிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற்றுவரும் 16ஆவது அத்தியாயத்தில் அதி சிறந்த பெறுபேறுகளை ஈட்டும் குறிக்கோளுடன் களம் இறங்குகிறது.

அவுஸ்திரேலியாவில் 1988இல் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்திலிருந்து சகல அத்தியாயங்களிலும் இலங்கை விளையாடி வந்துள்ளது.

26 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இறுதிவரை முன்னேறி இலங்கை உப சம்பியனாகி இருந்தது.

அதன் பின்னர் இரண்டு தடவைகள் அரை இறுதிவரை முன்னேறிய இலங்கை, கடைசியாக தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 15ஆவது அத்தியாயத்தில் சுப்பர் 6 சுற்றில் விளையாடி இருந்தது.

இம்முறை சம்பியனாக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் றோயல் கல்லூரி வீரர் விமத் டின்சார தலைமையிலான இலங்கை இளையோர் அணி, தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான ஏ குழு போட்டி விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

விமத் டின்சார (தலைவர்), கவிஜ கமகே (உப தலைவர்), சேனுஜ வேக்குனாகொட

விரான் சமுதித்த, சாமிக்க ஹீனட்டிகல, திமன்த மஹாவித்தான

செத்மிக்க செனவிரட்ன, துல்னித் சிகேரா, சமரிந்து நெத்சார

ஆதம் ஹில்மி, குகதாஸ் மாதுளன், விக்னேஸ்வரன் ஆகாஷ்

ஸ்ரீ ராம் ஜீவகன், மலின்த சில்வா, ரசித் நிம்சார

உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற இரண்டு உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியதன் மூலம் இலங்கை அணி மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் கடைசி குழுநிலை போட்டியில் பங்களாதேஷிடமும் அரை இறுதியில் இந்தியாவிடமும் தோல்வி அடைந்ததால் இலங்கை இளையோர் அணி நெருக்கடியை எதிர்கொண்டது.

இந்தத் தோல்விகளை அடுத்து 3 மாற்றங்களுடன் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளில் தென் ஆபிரிக்காவையும் ஆப்கானிஸ்தானையும் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை இளையோர் அணி நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்துள்ளது.

பயிற்சிப் போட்டிகளில் விரான் சமுதித்த, துல்னித் சிகேரா, உப தலைவர் கவிஜ கமகே ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினர்.

குகதாஸ் மாதுளன், சாமிக்க ஹீனட்டிகல, விரான் சமுதித்த, ஸ்ரீராம் ஜீவகன், துல்னித் சிகேரா, விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் கட்டுப்பாட்டுடன் பந்து வீசி இருந்தனர்.

இதேவேளை, ஆசிய கிண்ணப் போட்டியில் பந்துவீச்சில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி 8 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரத்ன, உலகக் கிண்ணப் போட்டியில் கவனிக்கத் தக்க வீரர்களில் ஒருவராக ஐசிசி இனால் பெயரிடப்பட்டுள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வீரர்கள் பெரும்பாலும் இலங்கையின் இன்றைய ஆரம்பப் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் அடுத்த போட்டிகள்

ஜனவரி 19: எதிர் அயர்லாந்து

ஜனவரி 23: எதிர் அவுஸ்திரேலியா

19 வயதின்கீழ் இலங்கை குழாம்

விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உப தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீ ராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44