தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணே­சனின் வழி­காட்­டலில் முன்­னெ­டுக்­கப்­படும் இன்­னொரு திட்­ட­மாக, தேசிய சக­வாழ்­வினை மேம்­ப­டுத்தும் நோக்­கத்­துடன் "இலங்­கையர் எனும் அடை­யா­ளத்தை மூன்றாம் கண்ணால் பாருங்கள்" என்ற தலைப்பில் தேசிய சக­வாழ்­வினை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்­சினால் கைய­டக்கத் தொலை­பேசி குறுந்­தி­ரைப்­படப் போட்டி ஒன்றை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­போட்­டியில் கலந்­து­கொள்­ளு­மாறு தகை­மை­யா­ளர்­களை  தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் அழைப்பு விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் விடுக்­கப்­பட்­டுள்ள அறி­வித்­தலில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, 

இலங்கைப் பிர­ஜைகள் அனை­வரும் நான்கு  பிரி­வு­களின் கீழ் போட்­டியில் பங்­கு­பற்­றலாம். பத்து சிறந்த குறுந்­தி­ரைப்­ப­டங்­க­ளுக்குப் பணப்­ப­ரி­சில்கள் வழங்­கப்­ப­டு­வ­தோடு போட்­டிக்­காக அனுப்­பி­வைக்­கப்­படும் அனைத்துப் போட்­டி­யா­ளர்­க­ளுக்கும் பெறு­ம­தி­யான சான்­றிதழ் வழங்­கப்­படும்.

போட்டிப் பிரி­வுகள்: (1) சிங்­கள குறுந்­தி­ரைப்­படம் (2) தமிழ் குறுந்­தி­ரைப்­படம் (3) ஆங்­கில குறுந்­தி­ரைப்­படம் (4) இரு­மொழி குறுந்­தி­ரைப்­படம் (சிங்­களம் மற்றும் தமிழ்)

கருப்­பொருள்: 'இலங்­கையர் - எமது அடை­யாளம் – பன்­மைத்­துவம் - எமது சக்தி' எனும் கருப்­பொ­ருளின் கீழ் தேசிய சக­வாழ்­வினை மேம்­ப­டுத்­து­வ­தாக இந்த திரைப்­ப­டங்கள் அமைந்­தி­ருக்க வேண்டும், 

நிபந்­த­னைகள்: (1) போட்­டிக்­காக சமர்ப்­பிக்­கப்­படும் குறுந்­தி­ரைப்­ப­ட­மா­னது கைய­டக்கத் தொலை­பே­சி­யினால் மட்டும் ஒளிப்­ப­திவு செய்­யப்­பட்ட ஆக்­க­மாக இருத்தல் வேண்டும். 

(2) இந்த ஆக்­க­மா­னது அதி­க­பட்சம் 7 நிமி­டங்­களை கொண்­டி­ருப்­ப­துடன் அவை குறித்த கருப்பொருளை மைய­மாகக் கொண்­டி­ருத்தல் வேண்டும்.

(3) திரைப்­ப­டத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் (உள்­ள­டக்கம், இசை போன்­றன) அறி­வுசார் சொத்­து­ட­மைகள் தொடர்­பாக அமைச்­சினால் பொறுப்­பேற்­கப்­ப­ட­மாட்­டாது. 

(4) ஒரு போட்­டி­யாளர் ஒரு ஆக்­கத்­தினை மட்டும் சமர்ப்­பித்தல் வேண்டும்.

(5) இந்த ஆக்­கங்­களின் காட்­சித்­த­ர­மா­னது (Pixels) 720 க்கு அதி­க­மாக காணப்­ப­டுதல் வேண்டும்.

(6) அனைத்து ஆக்­கங்­க­ளையும் MP4 காணொ­ளி­யாக (Video) இறு­வட்டில் (DVD) சமர்ப்­பித்தல் வேண்டும். 

(7) ஆக்­கத்­துடன் போட்­டி­யா­ளர்­களின் பெயர் மற்றும் விப­ரங்­களை இவ் விண்­ணப்பப் படி­வத்­திற்­க­மைய சமர்ப்­பித்தல் வேண்டும்.

(8) இது படைப்­பா­ளியின் சொந்த ஆக்­க­மா­கவும், அதனை இதற்கு முன்னர் இந்­நாட்­டிலோ அல்­லது வேறு ஒரு நாட்­டிலோ தயா­ரிக்­கப்­பட்ட ஆக்­கத்தின் பிர­தி­யாகவோ தழு­வ­லாகவோ இருத்தல் கூடாது.

(9) இப்­போட்­டியில் வயது வித்­தி­யாசம் இன்றி அனை­வரும் பங்­கு­பற்ற முடியும்.

(10) சமர்ப்­பிக்­கப்­படும் அனைத்து ஆக்­கங்­களும், அவற்றை காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்­கான உரித்தும் அமைச்­சுக்­கு­ரி­யது. 

(11) அமைச்சின் செய­லா­ள­ரினால் நிய­மிக்­கப்­படும் நடுவர் குழு­வினால் ஆக்­கங்கள் தெரிவு செய்­யப்­படும்.

(12) இது தொடர்­பான இறுதித் தீர்­மானம் செய­லா­ள­ருக்­கு­ரி­ய­தாகும். 

(13) போட்­டிக்­கான ஆக்­கத்­தினை அனுப்­பு­வ­தற்கு எதிர்­பார்க்கும் போட்­டி­யா­ளர்கள் கீழே குறிப்­பி­டப்­பட்ட விப­ரங்­களை கொண்ட விண்­ணப்பப் படிவம் ஒன்­றினைத் தயா­ரித்து அத­னுடன் உரிய ஆக்­கத்­தினை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு அனுப்ப வேண்டும்.

(14) இறுதித் திகதி 25.09.2017 (திக­திக்கு முன்னர் அனுப்ப வேண்டும்)  

பரி­சுகள்: (1) முதலாம் பரி­சு-­ ஒரு இலட்சம் ரூபா (2) இரண்டாம் பரி­சு-­ எழு­பத்தையா­யிரம்- ரூபா (3) மூன்றாம் பரி­சு-­ ஐம்­ப­தா­யிரம் - ரூபா (4) அனைத்துப் போட்­டி­யா­ளர்­க­ளுக்கும் பரி­சுகள் மற்றும் சான்­றி­தழ்கள் 

விண்­ணப்ப விப­ரங்கள்: பெயர்: (திரு / திரு­மதி / செல்வி) (2)முக­வரி (3)தொலை­பே­சி­இல (4)மாவட்டம் (5)வயது (6) தேசிய அடை­யாள அட்டை இல (7) ஆக்­கத்தின் பெயர் (8) போட்டிப் பிரிவு   

விண்­ணப்­ப­தா­ரியின் உறு­தி­யுரை: (1) இத்­துடன் சமர்ப்­பிக்­கப்­படும்...........................................................(ஆக்­கத்தின் பெயர்) ஆனது கைய­டக்க தொலை­பே­சி­யினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள எனது சுய ஆக்கம் என்றும், அது இதற்கு முன்னர் எந்­த­வொரு ஊட­கத்­திலும் ஒளி­ப­ரப்புச் செய்­யப்­ப­ட­வில்லை என்றும் போட்டியின் சட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்படுகின்றேன் என்றும் உறுதியளிக்கின்றேன் கையொப்பம் (2) கையொப்பம் (3) திகதி

விண்ணப்பங்கள் மற்றும் ஆக்கங்கள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, இல. 40, புத்கமுவ வீதி, இராஜகிரிய. தொ.பே.இல :011-2883932 , 011-2883936, தொலை நகல்:011-2883785 (மேலதிக தொடர்புகளுக்கு: சிவசங்கர் - 0777233215)