அனுராதபுரம் மற்றும் மடுல்சீமை பகுதிகளில் விபத்து: இருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

17 Jan, 2026 | 10:11 AM
image

அனுராதபுரம் மற்றும் மடுல்சீமை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம் விமான நிலைய வீதியில் வன்னியன்குளம் பகுதியில், இடம்பெற்ற வீதிவிபத்தில் வெள்ளிக்கிழமை (16) ஒருவர் உயிரிழந்துள்ளார்.விமான நிலையத்தை நோக்கிச் சென்ற கார், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இதன்போது பாதசாரி காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மடுல்சீமை - பசறை வீதியில் மாலிகாதென்ன நோக்கிச் செல்லும் துணை வீதியில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (16) இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மடுல்சீமை, வெருல்லபத்தனை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.                  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 17:14:26
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில்...

2026-02-17 16:14:10