நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து வெற்றி; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Published By: Vishnu

17 Jan, 2026 | 03:07 AM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்றுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (16) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து ஆகியன இலகுவாக வெற்றியீட்டின.

ஆனால், மற்றொரு  முன்னாள்  உலக  சம்பியன்   தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

குழு ஏ - அவுஸ்திரேலியா வெற்றி

அயர்லாந்துக்கு எதிராக விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில்  வெள்ளிக்கிழமை   நடைபெற்ற ஏ குழு போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளது.

அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 39.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து அமோக வெற்றியீட்டியது.

ஸ்டீவன் ஹோகன், இலங்கை வம்சாவளியான நிட்டேஷ் செமுவல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 186 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தனர்.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது சதத்தைக் குவித்த ஸ்டீவன் ஹோகன் 111 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

நிட்டேஷ் சமுவேல் 101 பந்துகளை எதிர்கொண்டு பவுண்டறிகள் இல்லாமலேயே 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

வில் மலாஜ்ஸுக்கு 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாகத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் இருவர் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ரொப் ஓ'ப்றயன் 79 ஓட்டங்களையும் ப்ரெடி  ஓகில்பி 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சார்ள்ஸ் லெகமண்ட் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: ஸ்டீவன் ஹோகன்.

சி குழு - இங்கிலாந்து வெற்றி

ஹராரே தக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற சி குழுவுக்கான போட்டியில் பாகிஸ்தானை 37 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

காலெப் பெல்கொனர் 66 ஓட்டங்களையும் பென் டௌக்கின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஹ்மத் ஹுசெய்ன் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

பர்ஹான் யூசுப் மாத்திரம் திறமையாக துடுப்பெடுத்தாடி 65 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அலெக்ஸ் க்றீன்  21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜேம்ஸ் மின்டோ, 

ரெல்ஃபி அல்பர்ட் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: காலெப் பெல்கொனர்

டி குழு - தென் ஆபிரிக்காவுக்கு ஏமாற்றம்

நமிபியா விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த முன்னாள் சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் பெரும் ஏமாற்றம் அடைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாவது விக்கெட் 31 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது.

ஆனால், காலித் அஹமத்ஸாய், பைசால் ஷினோஸதா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

காலித் அஹ்மத்ஸாய் 74 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 81 ஓட்டங்களையும் பெற்று ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். (183 - 3 விக்.)

அதே மொத்த எண்ணிக்கையில் மேலும் ஒரு விக்கெட் சரிக்கப்பட்டது.

உஸய்ருல்லா நியாஸாய் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கோர்ன் போத்தா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பயண்டா மஜோலா 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக போராடிய ஜேசன் ரோவ்ல்ஸ் 98 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட கோர்ன் போதா (25), லெத்தாபோ பாலாமோலாக்கா (22), டெனியல் பொஸ்மான் (20) ஆகிய மூவரும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் கதிர் ஸ்டனிக்ஸாய் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: உஸெய்ருல்லா நியாஸாய்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45
news-image

எஸ்.எஸ்.சி. மைதானத்தில் முதல் தடவையாக ஒளிவெள்ளத்தில்...

2026-02-10 19:09:09
news-image

பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் பிரகாசிக்க...

2026-02-10 15:46:05